சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேவையைப் பொறுத்து தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம்
நேற்றைய தினம் தங்கத்தின் விலை சற்றே குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் விலை மளமளவென உயர்ந்தது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,600 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வெள்ளி விலை உயர்வு
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ கணக்கில் பார்த்தால், ஒரே நாளில் ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000 என்ற நிலையை எட்டியுள்ளது.

LIVE 24 X 7