கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், இன்றும் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. வாரத் தொடக்கமான நேற்றே சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது நகை வாங்குவோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை உயர்வு
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,19,120 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை குறைவு
தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும், அதற்குப் போட்டியாக நேற்று அதிகரித்த வெள்ளியின் விலை இன்று சற்று சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000 (2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்) என்ற விலையிலும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் கவலை
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்களே உள்நாட்டிலும் இந்த விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

LIVE 24 X 7