சென்னையில் இன்று தங்கம் விலை ஆட்டமே காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலையில் ஒரு முறை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கம், மாலையில் மீண்டும் ஒரு பெரும் உயர்வைச் சந்தித்து, வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் சவரனுக்கு 5,200 ரூபாய் வரை உயர்ந்து நகைப்பிரியர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
தங்கம் விலையில் மெகா உயர்வு
சர்வதேச சந்தையின் அதிரடி மாற்றங்களால் இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 370 ரூபாய் உயர்ந்து, சவரனுக்கு 2,960 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் 1,22,640 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலையேற்றமே பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில், மாலை நேரத்தில் மீண்டும் ஒரு அதிரடி விலை உயர்வு நிகழ்ந்தது.
மாலை நிலவரப்படி, சவரனுக்கு மேலும் 2,240 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் 5,200 ரூபாய் எகிறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் 15,610 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,24,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் புதிய மைல்கல்
தங்கத்திற்கு சற்றும் சளைக்காமல் வெள்ளியும் இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. காலையில் கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 400 ரூபாய் என்ற நிலையை எட்டியது. இதன் மூலம் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 4 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலையில் மேற்கொண்டு மாற்றமின்றி அதே விலையிலேயே நீடிக்கிறது.
அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
நேற்று வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்ததால் மகிழ்ச்சியில் இருந்த மக்களுக்கு, இன்றைய விலை உயர்வு பேரிடியாக இறங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வரும் தங்கம், தற்போது 1.25 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த குடும்பங்கள் இந்த விலை உயர்வைக் கண்டு கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

LIVE 24 X 7