தமிழ்நாடு

Gold Rate: ஆபரணத் தங்கம் விலை கணிசமாக சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

Gold Rate: ஆபரணத் தங்கம் விலை கணிசமாக சரிவு!
Gold Rate
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று (ஏப்ரல் 11) சற்று குறைந்து விற்பனையாகிறது.

கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை பெரும் மாற்றங்களைச் சந்தித்து வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.1,600 வரை குறைந்த தங்கம், நேற்று மீண்டும் ரூ.1,000 உயர்ந்தது. இந்நிலையில், இன்று விலையில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது நகைப்பிரியர்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளாது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் கணக்கில் பார்த்தால், ஒரு கிராம் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.14,100-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.5,000 குறைந்திருந்த நிலையில், நேற்று அதே அளவு உயர்ந்து இன்று நிலைபெற்றுள்ளது.