சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் தரமணி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் தரமணியில் இருந்து ஆலந்தூர் நோக்கி காரில் சென்றார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது காரை தாறுமாறாக ஓட்டி பைக்கில் சென்ற ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த முருகேசன் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் முருகேசனுக்கு காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய செந்தில் குமாரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் 189 Mg பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் குடிபோதையில் காரை இயக்கி, தலைமை காவலர் செந்தில்குமார் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது துறைரீயிலான விசாரணை நடத்தப்பட்டது.
குடிபோதையில் தலைமை காவலர் காரை இயக்கி இருசக்கர வாகனம் மீது மோதிய சம்பவம், தலைமை காவலர் செந்தில்குமார் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், குடி போதையில் ஓட்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செந்தில்குமார் தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் நிலையில், கிண்டி போக்குவரத்து பலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை இன்று வருமாறு எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர் தற்போது, தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.