"காங்கிரஸ் கட்சிக்கு திராணி இருந்தால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனியாக போட்டியிட்டு பாருங்கள். ஒரு தொகுதி வெற்றி பெற தகுதி இருக்கிறதா என தெரிந்துவிடும்" என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
தேரர்தலை சந்திக்க பாஜக தயார்
சென்னை விமான நிலையத்தில் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக தயாராக தான் உள்ளது. நாளை மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் தேசிய ஜனநாயக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பிரதமர் தமிழ்நாடு வருவது தேர்தலுக்காக மட்டுமில்லை எத்தனையோ முறை தமிழ்நாடு வந்து சென்று உள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமருக்கு அன்பு, பாசம் உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மொழி ,கலாச்சாரம் குறித்து ஆரம்ப காலத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.
திமுக & விஜய்யிடம் காங்கிரஸ் பேரம்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தேர்தலில் தனித்து போட்டியிட எந்த தகுதியும் கிடையாது. அவர்களுக்கு அந்த தைரியமும் கிடையாது. அவர்கள் திமுக மற்றும் விஜயிடமும் பேரம் பேசுகிறார்கள். அவர்களுக்கு யாரிடம் இருந்து லாபம் அதிகமாக வருகிறதோ அவர்களிடம் சென்று சேர்ந்து விடுவார்கள். இனி மத்தியில் காங்கிரஸ் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வெறும் நான்கு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் இருக்கிறது.
சூடு, சொரணை காங்கிரஸுக்கு இல்லை
தற்போது தான் ரோஷம் வந்து தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் பங்கு தரமாட்டோம் எனக் கூறியுள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ரோஷம் வரவில்லை, சூடு சொரணை எதுவுமே காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கிடையாது.
இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் செல்லுமா? விஜய்யிடம் செல்லுமா என்று தெரிந்துவிடும். காங்கிரஸ் கட்சிக்கு திராணி இருந்தால் இந்த ஒரு தேர்தலில் தனியாக நின்று பார்க்கட்டும். அப்போது ஒரு தொகுதி வெற்றி பெற தகுதி இருக்கிறதா என தெரிந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7