தமிழ்நாடு

மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்.. 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா புகார்!

சமையல் கலைஞராகவும் நடிகராகவும் பரிச்சயமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்..  2-வது மனைவி ஜாய் கிரிசில்டா புகார்!
மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்.. 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா புகார்!
“ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார். அவர்தான் என் கணவர். ஆனால், அவர் இன்னும் தனது முதல் மனைவியுடன் தொடர்பில் இருப்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு நீதி வேண்டும்!” எனக் கூறிய ஜாய், காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.


இதுகுறித்து ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கூறியதாவது, “நாங்கள் சென்னை எம்.ஆர்.சி. நகர் திரிவேதியம்மன் கோவிலில் திருமணம் செய்தோம். அதன் பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ஒரே வீட்டில் குடும்ப வாழ்க்கை நடத்திவந்தோம். இப்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். இந்த நிலையில், ரங்கராஜ் எனைத் தொடர்பு கொள்ள மறுக்கிறார். அவருடைய முந்தைய மனைவியுடன் அவர் தொடர்ந்து உறவில் இருப்பது எனக்குத் தெரியவில்லை. இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னையும் என் குழந்தையையும் உரிமையும், நியாயமும் கிடைக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

ஜாய் தனது புகாரில் மேலும் கூறியதாவது,

“சமீபத்தில் ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் ரங்கராஜை நேரில் சந்தித்தேன். ஆனால் அவர் என்னைப் பார்க்க விரும்பவில்லை. பேச முயன்றபோது, அவர், மற்றும் அவரது நண்பர்கள் எனக்கு எதிராகத் திரும்பினர். சிலர் என்னைத் தாக்கக் கூட முயன்றனர். இதுதொடர்பாகச் சிசிடிவி காட்சிகள், சாட்சிகள் உள்ளன. ரங்கராஜின் தம்பி மற்றும் நெருங்கிய நண்பர்கள், அவர் என்னுடன் வாழ்வதை எதிர்த்துச் செயல்படுகிறார்கள் என எனக்குச் சந்தேகம் உள்ளது.”

காவல் ஆணையரகத்தில் புகார்

இந்த விவகாரம் தொடர்பாக ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையரகத்தில் முறையிட உள்ளதாகவும், அவருடைய சட்ட ஆலோசகரின் உதவியுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். “இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பெண்கள் பயந்துவிடாமல், நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, பல பெண்களுக்கு எடுத்துக்காட்டு” என அவர் கூறினார்.


இந்த விவகாரம், சட்டரீதியாகப் பெரும் விவாதத்திற்கு வழிவகுக்கும். கோவிலில் திருமணம் செய்ததற்கான ஆதாரம், வீட்டில் வாழ்ந்ததற்கான சாட்சிகள், கர்ப்பம் தொடர்பான மருத்துவ ஆவணங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் என அனைத்தும் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக உள்ள நிலையில், தற்போது அளிக்கப்பட்ட புகார் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. அவர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.