தமிழ்நாடு

சொகுசு கார்களைத் திருடிய எம்பிஏ பட்டதாரி.. சவால்விட்ட திருடனை கைது செய்த சென்னை போலீஸ்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Rolls Royce சொகுசுகாரை திருடுவது போல, நாடு முழுவதும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான சாவி தயாரித்து சொகுசு காரர்களை திருடிய மெகா திருடனை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சொகுசு கார்களைத் திருடிய எம்பிஏ பட்டதாரி..  சவால்விட்ட திருடனை கைது செய்த சென்னை போலீஸ்!
சொகுசு கார்களைத் திருடிய எம்பிஏ பட்டதாரி.. சவால்விட்ட திருடனை கைது செய்த சென்னை போலீஸ்!
சென்னை அண்ணாநகர் 16வது பிரதான சாலையில் வசித்து வருபவர் எத்திராஜ்ரத்னம். பத்திரிக்கை நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி தன் வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த ஃபார்ச்சூனர் காரைக் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்துத் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை செய்ததில் சென்னையில் மட்டுமல்லாது புறநகர் மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் நான்கு கார்களைத் திருடியது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சர்வ சாதாரணமாக வண்டி உரிமையாளரைப் போல் சாவியை பயன்படுத்தி காரைத் தேடிச் சென்றது அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டும் அல்லாது சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும் பொழுதுப் போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வாகனத்தை எடுத்துச் செல்வதும் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சேலம், கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்குச் சென்று பாண்டிச்சேரி சென்றதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினரை திசை திருப்ப இது போன்று சுற்றவிடுவதும் தெரியவந்துள்ளது.

மேலும் சிசிடிவியில் உள்ள திருடனின் புகைப்படங்களை ஆய்வு செய்தபோது இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடனான சத்யேந்திர சிங் சகாவத் என்பதை போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து கார் திருடன் செல்லும் இடங்களை எல்லாம் ஆய்வு செய்தபோது, பாண்டிச்சேரியில் இருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் கால் டேட்டா ரெக்கார்ட் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சைபர் கிரைம் போலிசார் உதவியுடன் சத்யேந்தர் சிங் சகாவத்தை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்


கைது செய்யப்பட்ட சத்தியேந்தர் சிங் சகாவத்தை விசாரணை செய்வதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விமானம்மூலம் சென்னை வந்த சத்தியந்திர சிங், இரு சக்கரவாகனம் ஒன்றை திருடி லான்சன் டொயோட்டோ உள்ளிட்ட சொகுசு கார் சர்வீஸ் சென்டர்களை தேடிச் சென்றது தெரியவந்துள்ளது

குறிப்பாகக் கோயம்பேடு லேன்சன் டொயோட்டோ சர்வீஸ் சென்டரில், சத்யேந்திர சிங் சஹாவத் நோட்டமிட்டு உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது. அந்தச் சர்வீஸ் சென்டரில் ஃபார்ச்சூனர் கார் வைத்திருக்கும் உரிமையாளர்களின் பட்டியல்களைத் திருடிச் சர்வீஸ் மற்றும் ரிப்பேர் விட வரும் நபர்களின் வீட்டிற்கு சென்று நோட்டமிட்டு காரைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

சத்தியேந்திர சிங் சகாவத் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகச் சொகுசு கார்களை மட்டுமே நாடு முழுவதும் திருடியது தெரியவந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு காரர்களை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

Imageபல மாநில போலீசாரிடம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் திருடிய பணத்தில் வழக்கறிஞர் மூலமாக ஜாமினில் வெளிவந்து மீண்டும் கைவரிசை காட்டுவது தெரியவந்துள்ளது. குறிப்பாகப் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கொலை செய்ய முயற்சி செய்த மிகப்பெரிய ரவுடி கும்பலான லாரன்ஸ் பிஷ் நோய் கேங்கிற்கு கார்களை விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகச் சத்யேந்திர சிங் சகாவத் பி டெக் மற்றும் எம்பிஏ பட்டதாரி ஆவார். இது போன்று சொகுசு காரர்களின் சர்வீஸ் சென்டரில் உரிமையாளர்களின் தகவல்களைத் திருடிக் கார்களைத் திருடுவது தெரிய வந்துள்ளது. சர்வீஸ் சென்டருக்கு ரிப்பேர் ஆக வரும் பார்ச்சூனர் உள்ளிட்ட சொகுசு கார்களுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவை எங்கே செல்கிறது எனக் கண்காணித்து நான்கு நாட்கள் நோட்டமிடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போலியாகச் சொகுசு கார்களின் சாவியை தயாரித்து உரிமையாளர்கள் அசந்த நேரத்தில் காரைத் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதனால் திருடும்போது வண்டி உரிமையாளர்போல் டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு சாவியை வைத்துச் சொகுசு காரை ஓப்பன் செய்து சர்வ சாதாரணமாகத் திருடிச் செல்வது தெரியவந்துள்ளது. திருடியபின் காரின் நம்பர் பிளேட்டை மாற்றிச் சாலை மார்க்கமாகவே அருகில் இருக்கும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று விட்டு ராஜஸ்தான் ஜெய்ப்பூருக்கு செல்வது தெரியவந்துள்ளது

போலீசாரை திசை திருப்புவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பின் லாரன்ஸ் பிஸ்னோய் கேங் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதோடு மட்டுமல்லாது நேபாள நாட்டில் காரை விற்பதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகச் சேசிங் நம்பர் உள்ளிட்டவற்றை மாற்றிக் காரை வெற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்தது தெரியவந்துள்ளது. கடைசியாகத் தெலுங்கானா மாநிலத்தில் பிரபல கன்னட தயாரிப்பாளர் மஞ்சுநாத் ஃபார்ச்சூனர் காரைத் திருடியபோது கைது செய்யப்பட்ட சத்தியந்திரசிங் சகாபத் ஜாமினில் வெளிவந்து மீண்டும் தமிழகத்தில் கைவரிசை காட்டி உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தன்னை பிடிக்க முடியாத போலீசார் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இருக்கும் சத்திய சத்தியந்தர் சிங் தந்தை மற்றும் மனைவியிடம் விசாரிக்கச் சென்றால், catch me if u can எனப் போலீசாரிடம் முடிந்தால் என்னைப் படியுங்கள் எனப் போலீசாரிடம் குறுஞ்செய்தி அனுப்பிய சவால் விடும் கார்திருடன் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது சென்னை போலீசார் கைது செய்து விசாரிக்கும்போது கூடத் தன்னை வெளியில் எடுக்க வழக்கறிஞர் வருவதாகவும் ஜாமீனில் வெளிவந்தபிறகு மீண்டும் தமிழகத்திற்கு திருட வருவேன் எனக் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் விசாரணை செய்யும் போலீசாரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் 12 கார்களைத் திருடத் திட்டமிட்டதையும் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர் இதுவரை திருடிய கார்களை ஹைதராபாத் ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது குறிப்பாகக் காரைத் திருடிவிட்டு அதற்குப் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டுகளை ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதிகளிலிருந்து திருடி வந்து பயன்படுத்துவதால், அந்த நம்பர் பிளேட்டுக்கு சொந்தமான வாகன உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கில் போக்குவரத்து அபராதத்தில் சிக்கித் தவிப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகக் காரைத் திருடியவுடன் ஊரிலிருந்து எடுத்து வந்த நம்பர் பிளேட்டை பயன்படுத்தி அதிவேகமாகப் போக்குவரத்து விதிமீறல்களை செய்து கொண்டு, இராஜஸ்தான் மாநிலத்துக்கு எடுத்துச் செல்வதால், நடுவில் போக்குவரத்து போலீசாரிடமும் சிசிடிவி காட்சிகள் மூலமாகவும் போக்குவரத்து அபராதங்கள் போடப்பட்டு அந்த நம்பர் பிளேட் சொந்தமான வாகன உரிமையாளர்கள் சிக்கித் தவிப்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சத்யேந்தர் சிங் சகாபத் திருடிய கார்களை அகமதாபாத், ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தில் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது அதை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் இதே போன்று 12 கார்களைத் திருடத் திட்டமிட்டு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கார் திருடனிடமிருந்து போலி சாவிகள் தயாரிப்பதற்கான தொழில் நுட்ப உபகரணங்கள் மற்றும் பல்வேறு போலி தொகுப்பு சாவிகள் ஆவணங்கள் நம்பர் பிளேட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து இன்னும் எத்தனை இடங்களில் இது போன்று கார்களைத் திருடி இருக்கிறார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் சொகுசு கார்களின் சர்வீஸ் சென்டர் நுழைந்து உரிமையாளர்களின் தகவல்களைத் திருடி, கார்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக்கும் சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட சொகுசு கார் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.