தமிழ்நாடு

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்!
தென்ந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை நிலவரம்

வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலு குறைந்து தென் ஒடிசாவில் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வானிலை நிகழ்வுகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுக்குறையக்கூடும். மேலும், தெற்கு குஜராத் – வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அதோடு, தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை

ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 25 வரை:தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானிலை

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பல அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.