தமிழ்நாடு

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்.. வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்.. வாலிபர் கைது
Obscene message to woman on Instagram
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் 21 வயது பெண்ணிற்கு கடந்த 27.08.2024 ஆம் தேதி Rtr Mani Ketavanmani என்ற இன்ஸ்டாகிராம் ID-யிலிருந்து தவறான மெஸேஜ் வந்ததாக தெரிகிறது. அதனை அந்த பெண் பிளாக் செய்து விட்டதாகவும், மீண்டும் 02.11.2024 ஆம் தேதி அதே ID-யிலிருந்து வீடியோவின் கமெண்ட் செக்க்ஷனில் அவதூறாகவும், அருவருக்கதக்க வகையிலும் மெஸேஜ் வந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

எனவே அந்த நபரினை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Rtr Mani Ketavanmani என்ற ஐடியை பதிவிட்டவரை பற்றிய தகவல் வேண்டி Meta Platformக்கு மெயில் அனுப்பப்பட்டு அதனடிப்படையில் IP Address-ன் Mail ID, Phone Number, அதன் Network User ID முகவரி ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் பெற்றனர்.

விசாரணை மேற்கொண்டதில் இந்த வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூரைச் சேர்ந்த திவாகர் (29) என்பவரை நேற்று (ஜூலை 3) சென்னையில் வைத்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் குற்றத்திற்காக பயன்படுத்திய மொபைல் போன் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட திவாகர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.