பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வடசென்னை பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சி
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆக உள்ள நிலையில், பழிக்கு பழியாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மேற்பார்வையில் அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போலீசார் அறிவுறுத்தல்
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட பெரம்பூர் பகுதி குறுகலான இடம் என்பதால் பொதுக்கூட்டம் மற்றும் அன்னதானம் போன்ற செய்யக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாற்று இடத்தை தேர்வு செய்து நடத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசாம்பாவிதத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் 250 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஜூலை 5 ஆம் தேதி நினைவு தினத்தின் அன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே நாகேந்திரன் கூட்டாளிகளான வெள்ளைப்பிரகாஷ் நேற்று நாகேந்திரன் தங்கை கற்பகம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.