சென்னையில் இன்று அதிகாலை முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 8 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இடி, மின்னலுடன் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டுத்தீர்த்தது. பயங்கர சத்தத்துடன் கூடிய கனமழை காரணமாகச் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
சென்னையின் முக்கிய பகுதிகளாக அண்ணா நகர், கிண்டி, கோடம்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூரில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை காலை 8 மணிவரை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்த நிலையில், இன்று காலை முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
அதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் தேங்கிய மழைநீர்
சென்னையில் அதிகாலை முதலே கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் காலையில் பணிக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதே நேரம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்

— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 21, 2025