தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே பாதை பிரச்சனை: மாணவர்களுக்கு வழிவிடாமல் அராஜகம்

பாதை பிரச்சனையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை கட்டைகளை கொண்டு தடுத்தும் கம்புகளை கொண்டு விரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

 தஞ்சாவூர் அருகே பாதை பிரச்சனை: மாணவர்களுக்கு வழிவிடாமல் அராஜகம்
பாதை பிரச்சனையில் மாணவர்களுக்கு வழிவிடாமல் அராஜகம்
தஞ்சாவூர் மாவட்டம், கொல்லாங்கரை கிராமத்தில் பல ஆண்டுகாலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை, தனிநபர் தங்களுக்கு சொந்தமான பாதை எனக்கூறி வேலி போட்டு பாதையை மறித்துள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடந்த மே மாதம் இரண்டாம் தேதி காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்ட அறிவிப்பை அடுத்து கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமைதி பேச்சுவார்த்தையில் நிலம் தனக்கு சொந்தமானது என கூறும் நபர் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவரை பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

மாணவர்களுக்கு வழிவிடாமல் அராஜகம்

இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தை முடிந்த பிறகும், அந்த வழியை செல்லும் மாணவ, மாணவிகளை கட்டைகளை வைத்து தடுத்தும், மேலும் கட்டைகளை கொண்டு அவர்களை விரட்டியும் உள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு மக்களுக்கும் சமூக தீர்வை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலத்திற்கு உரிய பட்டா உள்ளதாக கூறப்படுகிறது.