நியாய விலை கடையில் வழங்கப்படும் பொருட்களை வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்று வழங்கும் வகையில் ‘தாயுமானவர்’ திட்டத்தைச் சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து திருச்சி உறையூர் பகுதியில் தாயுமானவர் திட்டம் துவங்கப்பட்டது. அதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வீட்டிற்கு சென்று நியாய விலை பொருட்களை வழங்கினார்.
ஒரே நாளில் செய்யும் காரியம் அல்ல
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நேரு, “தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து அவர்களிடம் நேரடியாகப் பேசி உள்ளோம். 300 பேருக்கு மேல் வேலைக்கு மீண்டும் வந்துள்ளனர். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 17,000 பேரை நிரந்தரம் செய்துள்ளதாகத் துறை அமைச்சர் கூறி உள்ளார். மீதமுள்ளவர்களை நிரந்தரம் செய்வது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
ஒரே நாளில் செய்யும் காரியம் அல்ல. தேர்தல் நெருங்குவதால் எதிர்க்கட்சிகள் தூய்மை பணியாளர்களைச் சந்திக்கின்றனர். ஒருவரை கூடப் பணியிலிருந்து நாங்கள் எடுக்கவில்லை. அருமையான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். நாய்களைக் கருத்தடை செய்து வெளியே விடக் கூடாது அதனைத் தனியாக அடைத்து வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதற்கான உத்தரவு முறையாக வந்தவுடன் தமிழகம் முழுவதும் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
தேர்தல் வருவதால் பேசுகின்றனர்
520 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். நிதிநிலை சேர்ந்தவுடன் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். ஒரே நாளில் எந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும். சொன்ன வாக்குறுதியைவிட சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம்.தேர்தல் வருவதால் எதிர்க்கட்சிகள் இதைப் பேசுகின்றனர்” எனத் தெரிவித்தார்.