தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!
Gold Rate
தங்கத்தின் விலை நேற்று (நவம்பர் 24) சரிவைக் கண்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,660 உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களின் நிலவரம்

கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்தை எட்டிய தங்கம் விலை, அதே மாதம் 28-ஆம் தேதி ரூ.88,600 என்ற நிலைக்குச் சரிந்தது. அதன் பின்னரும், விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த மாதம் 13-ஆம் தேதி தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று, தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து, சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.110 குறைந்து ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.171-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.174-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.