சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 17) சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் சமீபத்திய விலை நிலவரம்
தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறக்குறைய சவரன் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வார இறுதியில் சவரனுக்கு ரூ.2,560 அதிரடியாக உயர்ந்து ரூ.98,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. அதைத் தொடர்ந்து, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலையும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,120 என்ற வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நேற்று சற்றே தணிந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் வெள்ளியின் விலையும் வரலாறு காணாத வகையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.222 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,22,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7