அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடித் திருவாதிரை விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கை கொண்ட சோழபுரம் வருகை தந்தார்.
சைவ சித்தாந்தமும் - சோழர் கோயில் கலைகளும் என்ற புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்டுப் பின்னர் கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு முடித்து முப்பெரும் விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாமன்னன் இராசராசசோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு வரும் காலத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் கோமகன் நன்றி தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியுள்ளதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் கங்கைகொண்ட சோழபுரம் வருகை என்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆடித் திருவாதிரை விழாவைக் கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் கொண்டாடி வருகிறோம். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆடித் திருவாதிரை விழாவைத் தமிழ்நாடு அரசே அரசு விழாவாக அங்கீகரித்துக் கொண்டாடி வருவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்திய மன்னர்களிலேயே கப்பற்படையை பெரும் எண்ணிக்கையான அளவில் கட்டமைத்து தெற்காசிய படையெடுப்பை நடத்தி புகழ்பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேப்போல இன்றைய தினம் ராஜேந்திர சோழனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 1000 ரூபாய் நாணயம் வெளியிட்டது எங்களுக்கெல்லாம் பெருமையும், மகிழ்வாக உள்ளதாகவும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமும் தலைவர் கோமகன் நன்றி தெரிவித்து கொண்டார்.