தமிழ்நாடு

இஸ்ரேலிய திரைப்பட விழா: தடை விதிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு

இஸ்ரேலிய திரைப்பட விழா தடை விதிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய திரைப்பட விழா:  தடை விதிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு
இஸ்ரேலிய திரைப்பட விழா: தடை விதித்தால் முற்றுகை போராட்டம் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு


இஸ்ரேலிய திரைப்பட விழா தடை விதிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி, காசா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அன்று தொடங்கியது. இஸ்ரேல் - காசா போரில் பொதுவாக இஸ்ரேல் தான் தாக்குதலை தொடங்கும். ஆனால், இந்தத் தடவை, வழக்கத்திற்கு மாறாக பாலஸ்தீனம் போரை தொடங்கியது. ஏவுகணை தாக்குதல்கள், வான்வழி தாக்குதல்கள், தரைவழி தாக்குதல்கள் என போர் தொடர்ந்துகொண்டே இருக்க, பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும் தொடர்ந்தன.

பல நாடுகளின் தலையீடு காரணமாக பாலஸ்தீனம் மீதான தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் செய்ததது. இந்த போர் முடிவுக்கு வந்தது என உலக மக்களும், பாலஸ்தீன மக்களும் பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த போரால் பெரிதும் பாதிக்கப்படும் காசாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் காசா மக்கள் வாழ்வா? சாவா போராட்டத்தில் இருக்கின்றனர்.

இலங்கையில் நடந்த இன அழிப்பு போன்று, பாலஸ்தீனத்தில் ஒரு இன அழிப்பை இஸ்ரோல் மேற்கொண்டு வருகிறது. பல வெளிநாடுகள் இஸ்ரோலின் செயலுக்கு கடும் கண்டம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு தி.மு.க. அரசு அனுமதி அளித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) நடத்தவிருக்கும் இஸ்ரேலிய திரைப்பட விழா (மே 29 முதல் 31, 2025 வரை) நடத்த அனுமதி வழங்குவது தி.மு.க. அரசின் மனிதாபமற்ற செயலை காட்டுகிறது.

இலங்கை இன அழிப்பின் போது எப்படி ஒரு கபட நாடகத்தை அப்போதைய தி.மு.க. அரசு நடத்தியதோ, அதே போன்று பாலஸ்தீன விவகாரத்திலும் இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுவதை காட்டுகிறது.

சென்னை இசைக் கல்லூரியில் மே 29 முதல் 31, 2025 வரை நடைபெறவிருக்கும் இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இல்லை என்றால், இஸ்ரேலிய திரைப்பட விழா நடைபெறும் சென்னை இசைக்கல்லூரியை தமிழ்நாடு முஸ்லிம் லீக் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.