தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை.. தென் மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், வெயில் தணிந்து இதமான சூழல் ஏற்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை.. தென் மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை.. தென் மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் முற்றிலுமாகத் தணிந்து, இதமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 21 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை, இன்று (ஆகஸ்ட் 16) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.