நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. விடுமுறையை கழிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இன்று உதகை 127-வது மலர்க் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, அதனை பார்வையிட்டார். மலர்க் கண்காட்சியை தொடங்கி வைக்க சாலையில் நடைபயணமாக வருகை தந்த முதலமைச்சருக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சுற்றுலா பயணிகளை கவர இந்த ஆண்டு பிரம்மாண்டமான அரண்மனை நுழைவு வாயில், அரண்மனை, ராஜா, ராணி சிம்மாசனம், அரண்மனைக் காவலர்கள், யானை, புலி, அன்னப் பறவை, கல்லணை மதகு உள்ளிட்ட மலர் அலங்கார சிற்பங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவு ஒரு வழக்கம். இச்சமயங்களில் நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். மலர் அலங்கார சிற்பங்களுக்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். குறிப்பாக ராஜராஜ சோழன் நமது சிம்மாசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
127வது மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த ஆண்டு கார்னேஷன், கிரைசாந்தியம் 2 லட்சம் மலர்களை கொண்டு 24 அடி உயரம் 90 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டமான தஞ்சாவூர் ராஜராஜ சோழன் அரண்மனை மலர் அலங்கார வடிவமைப்பு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அதேபோல் 25 அடி உயரம் 30 அடி அகலம் கொண்ட 1 லட்சத்து 70 ஆயிரம் கிரைசாந்தியம், ரோஜா, கார்னேஷன் மலர்களைக் கொண்டு அரண்மனை நுழைவு வாயில், இதேபோல் 25,000 கிராசாந்தியம் மலர்களைக் கொண்டு யானை, 16,000 ரோஜா மலர்களைக் கொண்டு ராஜா சிம்மாசனம், 16,000 கார்னேஷன் மலர்களைக் கொண்டு 127 வது மலர் கண்காட்சி வடிவம், 45 ஆயிரம் கிரைசாந்தியம் மலர்களைக் கொண்டு கல்லணை மதகு, 2500 கிரைசாந்தியம் மலர்களைக் கொண்டு ராணி வடிவம், 18 ஆயிரம் மலர்களை கொண்டு ஊஞ்சல், 45 ஆயிரம் மலர்களை கொண்டு அன்னபறவை, 45 ஆயிரம் கிரைசாந்தியம் மலர்களைக் கொண்டு சதுரங்கம் வடிவமைப்பு, 16 ஆயிரம் கிரைசாந்தியம் மலர்களைக் கொண்டு அரண்மனை காவலர்கள் என மொத்தமாக சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மலர்களைக் கொண்டு 24 மலர் அலங்கார வடிவமைப்புகள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு, சேலம், நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலில் இருந்து தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு அரங்குகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் 40,000 மலர் தொட்டிகளில் மேரி கோல்டு, பிரென்சு மேரி கோல்டு, டேலியா, பெட்டுனியா, சால்வியா, லில்லியம், சாமந்தி, கிரைசாந்தியம் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட ரகங்களில் 2 லட்சம் வண்ண, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.
இன்று தொடங்கிய 127 வது மலர் கண்காட்சி எதிர்வரும் 25ஆம் தேதி வரை 10 நாட்கள் வரை நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும், நீலகிரி பொறுப்பு அமைச்சருமான மு.பெ சாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, அரசு தலைமை கொறடா கா ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.