நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதி திருச்செங்கோடு சாலையில் ஈரோட்டில் இருந்து ஒரு குடிநீர் லாரி அவ்வழியாக வந்த பொழுது திடீரென லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றுவிட்டது.
தண்ணீரை திறந்துவிட்ட போதை ஆசாமி
குடிநீர் லாரி பழுதாகி நின்றதால் அதை சரி செய்வதற்காக ஓட்டுநர் லாரியை பழுதுபார்க்கும் மெக்கானிக்கை கூட்டி வர சென்ற நிலையில் திடீரென அவ்வழியாக வந்த மதுபோதையில் இருந்த ஒரு ஆசாமி லாரியில் இருந்த தண்ணீரை முழுவதுமாக திறந்து விட்டு வெளியேறிய தண்ணீரில் தன்னையும் மறந்து ஆட்டம் போடத் தொடங்கினார். பின்னர் வடிவேலின் பட காமெடி போல் தண்ணீரை நிறுத்தவும் முற்பட்டார்.
தண்ணீர் லாரியிலிருந்து தண்ணீர் வேகமாக வெளிவந்த காரணத்தால் போதை ஆசாமியின் தண்ணீர் நிறுத்தும் முயற்சி பலன் அளிக்காமல் லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது.
போலீசார் வந்ததால் அதிர்ச்சி
தண்ணீர் லாரியில் இருந்து வந்த தண்ணீரில் குளித்த போதை ஆசாமியின் போதை ஒரு கட்டத்தில் குறையவே அதன்பின் சம்பவத்தை கேள்விப்பட்டு பள்ளிபாளையம் போலீசார் அங்கு வந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட போதை ஆசாமி அங்கிருந்து நைசாக நடையை கட்டினார்.
போதை தலைக்கு ஏறி பழுதாகி நின்ற லாரியில் இருந்த தண்ணீரை திறந்து விட்டு ஆசை தீர நடனமாடி குளியல் போட்ட போதை ஆசாமியை அவ்வழியாகச் சென்ற பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
திகைத்து நின்ற ஓட்டுநர்
அதன்பின் லாரி ஓட்டுநர் மெக்கானிக்கை அழைத்து வந்தபோது லாரியில் இருந்த அனைத்து தண்ணீரும் வெளியேறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் விசாரித்த பொழுது போதை ஆசாமியின் செயலை விவரிக்க தலையில் கை வைத்த படி லாரியை சரி செய்து ஓட்டுநர் அங்கிருந்து லாரி எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றார்.