சென்னை விமான நிலையத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
அஜித் குமார் படுகொலை வழக்கில் தொடர்புடையவர் சாட்சிகளாக இருப்பவர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ள நிலையில், வீடியோ எடுத்த நபரை நான் சந்திக்கவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு தமிழக அரசு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
புகார் தாரரான நிகிதா மருத்துவர் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவர் பிஎச்டி பட்டம் பெற்றவர் என்பதும், அவர் குடும்பத்தினர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளதும் தற்சமயம் வெளியாகி உள்ளது. அது குறித்தும் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர் கோவிலுக்கு நகை கொண்டு வந்தாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆகவே இந்த வழக்கில் அது குறித்து விசாரணை மேற்கொள்வதும் முக்கியமானதாக உள்ளது. அவருக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் நீதிமன்றத்தில் அது மறுக்கப்பட்டுள்ளது. நகை கொண்டு வந்தாரா என்பது குறித்து தனி வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதிமுக பாஜக இணைந்து தமிழ்நாடு காப்போம் என்ற முன்னெடுப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால் பாஜக ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புகளுடன் சேர்ந்து எப்படி இபிஎஸ் நாட்டை காப்பாற்ற போகிறார் என்பதுதான் சந்தேகமாக உள்ளது. மேலும், அவரால் அவர்களால் தான் நாட்டிற்கு ஆபத்து என்று விமர்சித்தார்.
முதலமைச்சர் நேரில் சென்று முறையிட்ட பின்பும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்க மத்திய அரசு தயாராக இல்லை எனும் பொழுது தமிழ்நாட்டின் மீது எவ்வளவு கரிசனமாக மத்திய அரசு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும், தமிழகத்து மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தராமல் முடக்குவது கட்சிக்கு எதிரானது அல்ல அரசுக்கு எதிரானது அல்ல மாணவர்களுக்கு எதிரானது இதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள் மூர்க்கத்தனமானவர்களும் இருக்கிறார்கள். பொது மக்களை பாதுகாக்க கூடிய வகையில் பயிற்சி தேவைப்படுகிறது மக்களிடத்தில் அணுகும் முறை பல வன்முறைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.