தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று சென்னையில் அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், புதிய உச்ச விலையில் நீடிக்கிறது. அதே சமயம், வெள்ளி விலை இன்று சற்றுக் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்தைத் தொட்டதும், அதன் பிறகு விலை கொஞ்சம்கூடக் குறையவில்லை. அவ்வாறு விலை உயர்ந்து வந்து, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது.
அந்த நேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் அதன் விலையில் இடையில் சற்று சரிவு ஏற்பட்டது. அவ்வாறு விலை குறைந்து வந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கு கடந்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி விற்பனை ஆனது.
நேற்றைய அதிரடி விலை உயர்வு மற்றும் இன்றைய நிலவரம்
நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கு விற்பனை ஆனது. நேற்று (டிசம்பர் 12) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.1,600-ம், பிற்பகல் நிலவரப்படி மேலும் சவரனுக்கு ரூ.960-ம் என மொத்தம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆக விற்பனையாகிறது.

LIVE 24 X 7