சென்னை பல் மருத்துவமனையில் துறை தலைவராக பணி புரியும் இருளாண்டி பொன்னாயா. இவர் அவருடன் பணி புரியும் முதுகலை பெண் மருத்துவர்களிடம் அநாகரீகமாகவும், வார்த்தையாலும், மனரீதியாக துன்புறுத்தல் செய்வதோடு வரம்பு மீறி நடந்து கொள்வதாக, ஒரு ஆண் மருத்துவர் உள்பட 7 பெண் முதுகலை மருத்துவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.
புகார் அளித்து கடந்த ஓராண்டு காலத்தை கடந்த நிலையில், கொடுக்கப்பட்ட புகார்கள் மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில்., மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டு துறை தலைவரான இருளாண்டி பொன்னையாவிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அநாகரீகமாகவும், வரம்பு மீறி நடந்து கொண்ட காரணத்துக்காக பல் மருத்துவர் இருளாண்டி பொன்னையா புதுக்கோட்டை அரசு பல் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி தகவல் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக., சென்னை பல் மருத்துவனனையில் பணி புரிந்த மருத்துவர் தனலட்சுமி., இருளாண்டி பொன்னாயாவின் வார்த்தையால் மனரீதியாக பாதிக்கப்பட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.