வீடியோ ஸ்டோரி

Champions Trophy Semi Finals: வெளியேறியது Pakistan! அரை இறுதியில் Newzealand - India

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ராவல்பிண்டியில் நடைபெற்ற  6-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம், குரூப் ஏ-பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த பிரிவில் இடம் பிடித்த மற்ற அணிகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் இந்தியா - நியூசிலாந்து, பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளது