பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாராலிம்பிக் தொடர் நடந்து வரும் நிலையில், இந்தியா இதுவரை 4 பதக்கங்களை வென்று இருந்தது. இந்நிலையில், இந்தியா வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த போட்டியில் 211.1 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்த ரூபினா பிரான்சிஸ் வெண்கலத்தை கைப்பற்றியுள்ளார். இந்தியா பெற்ற 5 பதக்கங்களில் 4 பதக்கங்களை வென்றது பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ ஸ்டோரி
பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை அறுவடை செய்த இந்தியா!
பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை இந்தியா அறுவடை செய்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார்.