கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குப் போர்நிறுத்தம் மேற்கொள்வதாகத் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது நடத்தி வந்த தாக்குதல்களால் உலக நாடுகளிடையே பெரும் அச்சம் நிலவியது. "இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்" என்று எச்சரித்திருந்த அதிபர் டிரம்ப், தற்போது பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்தின் பேரில் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, சர்வதேச வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது இந்தப் போர்நிறுத்தத்திற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய பொருளாதார நெருக்கடி தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தம் - ஈரான் 10 நிபந்தனைகளுடன் சம்மதம்
இந்த போர் நிறுத்தத்திற்கு ஈரான் 10 நிபந்தனைகளுடன் சம்மதம் தெரிவித்துள்ளது.
1) ஈரான் மீது இனி எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் உறுதி அளிக்க வேண்டும்.
2) ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப்பாதையை ஈரான் தனது ராணுவக் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து வைத்திருக்கும்.
3) ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் உரிமையை சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும்.
4) அமெரிக்கா நேரடியாக ஈரான் மீது விதித்துள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும்.
5) மற்ற நாடுகள் ஈரானுடன் வணிகம் செய்வதைத் தடுக்கும் இரண்டாம் நிலை தடைகளையும் நீக்க வேண்டும்.
6) ஈரான் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள அனைத்துப் பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
7) சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர் குழு ஈரானுக்கு எதிராகப் பிறப்பித்த உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும்.
8) போரினால் ஏற்பட்ட உள்கட்டமைப்புச் சேதங்களுக்கு அமெரிக்கா ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
9) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து தளங்களிலிருந்தும் அமெரிக்கப் போர் படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.
10) ஈரான் மட்டுமல்லாது லெபனான், ஈராக், ஏமன் போன்ற பகுதிகளில் உள்ள ஈரானின் நட்பு குழுக்கள் மீதான தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும்.
அமைதி ஒப்பந்தத்தை நோக்கிய நகர்வு
மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை நிலைநாட்ட ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவுகளை அமெரிக்கா பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பெரும்பாலான கருத்து வேறுபாடுகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு வார கால அவகாசம் இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்ட உதவும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். "இந்த நீண்டகாலப் பிரச்னை தீர்வின் விளிம்பை எட்டியிருப்பது பெருமையளிக்கிறது" என அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LIVE 24 X 7