உலகம்

30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை: காத்திருந்து பழிவாங்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற முதியவரை, வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பாலியல் குற்றவாளிகளைக் கொல்வது தனது கடமை என அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை: காத்திருந்து பழிவாங்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!
சரித்திரக் குற்றவாளியை கழுத்தறுத்துக் கொன்ற இந்திய வம்சாவளி இளைஞர்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய 71 வயது முதியவரை, ஒரு இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலைக்கான பின்னணி

கொல்லப்பட்ட முதியவரான பிரம்மர், கடந்த 1995ஆம் ஆண்டு ஒரு குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், இவரது பெயர் சரித்திரக் குற்றவாளிகள் பதிவேட்டில் (Sex Offender Registry) இருந்துள்ளது. பாலியல் குற்றவாளிகளின் பட்டியல் அமெரிக்காவில் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கும் நிலையில், இந்தக் தகவலை அறிந்த வருண் சுரேஷ் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

வேடமிட்டு நடத்திய கொலை

பிரம்மர் வசித்து வந்த அதே பகுதியில் வசித்து வந்த வருண் சுரேஷ், வீடு வீடாகக் கணக்கெடுக்கும் பணியாளர் போல வேடமிட்டு பிரம்மரைத் தேடிச் சென்றுள்ளார். பிரம்மர் வீட்டின் கதவைத் திறந்ததும், "நான் சரியான நபரைத்தான் தேடி வந்துள்ளேன்" என்று கூறிய சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரம்மரின் கழுத்தில் குத்தியுள்ளார்.

உயிருக்குப் பயந்து தப்பியோட முயன்ற பிரம்மரைத் துரத்திச் சென்ற வருண் சுரேஷ், பக்கத்து வீட்டில் உள்ள சமையலறையில் வைத்து அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

அதிர்ச்சி தரும் வாக்குமூலம்

போலீஸ் விசாரணையில், பாலியல் குற்றவாளிகள் அனைவரும் சாக வேண்டியவர்கள்தான். அவர்களைக் கொலை செய்வது எனது கடமை. இது வேடிக்கையாக இருந்தது" என்று வருண் சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.