இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு சுக்லா (ஜூன் 25) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து SpaceX நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம் -4'மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி நண்பகல் 12 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டனர்.
அமெரிக்காவை சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேரும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்கள் தங்கியிருந்து நுண்ஈர்ப்பு விசை மற்றும் சூழலுக்கு ஏற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வினை வெற்றிகரமாக முடிவுபெற்ற நிலையில், தற்போது விண்வெளிக்கு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் மீண்டும் பூமியை நோக்கி பயணிக்க இருக்கின்றனர். அவர்கள் 13ம் தேதி புறப்பட்டு, மறுநாள் ஜூலை 14ம் தேதி பூமிக்கு வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விண்வெளி வீரரின் இந்த பயணம் இந்திய விண்வெளி சாதனையில் மேலும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர், விண்வெளியில் பல்வேறு விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.