இந்தியா

கடலூர் ரயில் விபத்து எதிரொலி - அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி!

நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும் இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்கில், தினசரி இருமுறை சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர் ரயில் விபத்து எதிரொலி - அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி!
கடலூர் ரயில் விபத்து எதிரொலி - அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி!
கடலூர் கடந்த ஜூலை.8 ஆம் தேதி, பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, ரயில் விபத்தின் பின்னணியில், பாதுகாப்பு குறைப்பாடுகள் இருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, ரயில்வே துறை மிகக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ரயில்வே அமைச்சரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்ட 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.

ரயில்வே மேற்கொள்ளவுள்ள 11 முக்கிய நடவடிக்கைகள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து லெவல் கிராசிங்குகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக நிறுவப்பட வேண்டும்.

இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்குகளில், தினமும் குறைந்தது இருமுறை தணிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனைத்து கிராசிங்குகளிலும் வேகத்தடைகள் (Speed Breakers) அமைக்கப்பட வேண்டும்.

அபாய எச்சரிக்கை பலகைகள் (Warning Boards) தெளிவாகக் காணப்பட வேண்டும்.

ரயில் வருகையை அறிவிக்கும் குரல் பதிவு அமைப்பு (Voice Alert System) இன்டர்லாக் செய்யப்படாத கிராசிங் வாயில்களில் சீராக செயல்படுவதை DRM (Divisional Railway Manager) உறுதிப்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வீடியோ கண்காணிப்பு அமைப்புகள் அடிக்கடி பரிசோதிக்கப்பட வேண்டும்.

மழை மற்றும் குறைந்த காட்சி சூழ்நிலைகளுக்குள், எச்சரிக்கைகளை இரட்டை ஒளியில் (Dual Signal) வழங்குதல்.

ரயில் ஓட்டுநர்களுக்கு, அபாயம் எச்சரிக்கும் முன்னறிவிப்பு முறைப்பாடுகள் குறித்து கட்டாய பயிற்சி.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு, பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்.

தனியார் பாதுகாப்பு பணியாளர்கள், முக்கிய கிராசிங்குகளில் ஒதுக்கப்படுவர்.

இரவு நேரங்களில் வெளிச்ச வசதிகள், கிராசிங்குகளில் மேம்படுத்தப்படும்.

இந்த நடவடிக்கைகள், பல்லாயிரக்கணக்கான பயணிகள் மற்றும் கிராசிங் வழியாக இயங்கும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.