உலகம்

சார்லி கிர்க் சுட்டுக்கொலை: அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்படும்- அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சார்லி கிர்க் சுட்டுக்கொலை: அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்படும்- அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
Trump To Award Charlie Kirk Presidential Medal of Freedom
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் (31), சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான "பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்" (Presidential Medal of Freedom) வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

சுட்டுக்கொலை

கடந்த 10 ஆம் தேதி காலை உட்டா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிர்க் பேசிக் கொண்டிருந்தபோது, பக்கத்து கட்டிடத்தின் மாடியில் இருந்து அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விருது அறிவித்த டிரம்ப்

சார்லி கிர்க்கின் படுகொலை குறித்து அறித்த முன்னாள் அதிபர் டிரம்ப், குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து அமெரிக்க அரசு தண்டிக்கும் எனக் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், செப்டம்பர் 11 தாக்குதல்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய டிரம்ப், "சார்லி கிர்க்கிற்கு அவரது மறைவுக்குப் பிறகு, விரைவில் 'பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்' விருது வழங்கப்படும்" என அறிவித்தார்.

விசாரணை தொடர்கிறது

இந்த வழக்கை விசாரித்து வரும் எஃப்.பி.ஐ., குற்றவாளியின் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், உட்டா டி.பி.எஸ். ஆணையர் பியூ மேசன், "சந்தேகப்படும் நபர் கல்லூரி மாணவர் வயதில் இருப்பவர் போலத் தெரிகிறார்" என்றும் தெரிவித்தார்.