இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக புக்கர் பரிசு கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வழங்கும் விழா லண்டனில் உள்ள டேட் மாடர்ன் (Tate Modern) அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த ஹார்ட் லாம்ப் என்கிற புத்தகம் புக்கர் பரிசை வென்றது. இந்த புத்தகத்தினை கன்னட மொழியில் எழுதியவர் 77 வயதான பானு முஷ்டாக். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் தீபா பாஸ்தி ஆவார்.
இந்த ஆண்டு புக்கர் பரிசினை வெல்பவருக்கு பரிசுத்தொகையாக £50,000 யூரோ வழங்கப்படுவதாகவும், பரிசுத்தொகையானது வெற்றிப் பெறும் நபர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர் இருவருக்கும் சமமாக பிரித்து பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.
புக்கர் பரிசு: இரண்டாவது கன்னட எழுத்தாளர்
புக்கர் பரிசினை வென்ற இரண்டாவது கன்னட எழுத்தாளர் முஷ்டாக் ஆவார். முன்னதாக 2013-ல் யு.ஆர்.அனந்தமூர்த்தி விருது பெற்றிருந்தார். மற்றொரு இந்திய எழுத்தாளர் - கீதாஞ்சலி ஸ்ரீ , தனது குடும்பக் கதையான டோம்ப் ஆஃப் சாண்டிற்காக - 2022 இல் சர்வதேச புக்கர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், பாஸ்தி இந்த பரிசை வென்ற முதல் இந்திய மொழிபெயர்ப்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக, தீபா பாஸ்தி கன்னடத்திலிருந்து கோட்டா சிவராம கரந்தின் ' The Same Village ' , 'The Same Tree' என்ற நாவலையும், கோடகினா கௌரம்மாவின் 'Fame's Game' என்ற சிறுகதைத் தொகுப்பையும் மொழிபெயர்த்துள்ளார் .
நடப்பாண்டு விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் கன்னட மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகம் உட்பட 6 புத்தகங்கள் இடம்பிடித்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

Perfection:பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளர் சோஃபி ஹியூஸ், வின்சென்சோ லாட்ரோனிகோவால் (Vincenzo Latronico) இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட 'பர்ஃபெக்ஷன்' (Perfection) என்ற நாவலின் மொழிபெயர்ப்பிற்காக பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலுக்கு ஹியூஸ் தேர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
Heart lamp:இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புத்தகமும் புக்கர் பரிசுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதிய ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகத்தை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளை உள்ளடக்கியுள்ளது. தென் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் அன்றாட வாழ்வினை கதைகளாக பதிவு செய்துள்ளது இந்த புத்தகம்.
Under the Eye of the Big Bird:
"ஸ்ட்ரேஞ்ச் வெதர் இன் டோக்கியோ" என்ற நாவலுக்காக மிகவும் பிரபலமான ஜப்பானிய எழுத்தாளர் கவாகாமி, (Hiromi Kawakami) ஆசா யோனெடா மொழிபெயர்த்த " அண்டர் தி ஐ ஆஃப் தி பிக் பேர்ட்" (Under the Eye of the Big Bird) என்ற நாவலுக்காக பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
On the Calculation of Volume I:
டேனிஷ் எழுத்தாளர் பாலே (Solvej Balle) மற்றும் ஸ்காட்டிஷ் மொழிபெயர்ப்பாளர் பார்பரா ஜே ஹேவ்லேண்ட் ஆகியோர் "ஆன் தி கால்குலேஷன் ஆஃப் வால்யூம் I" க்காக (On the Calculation of Volume I) பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
Small Boat:
வின்சென்ட் டெலெக்ராயிக்ஸின் (Vincent Delecroix) " சிறிய படகு " (Small Boat) என்ற புத்தகத்தை பிரெஞ்சு மொழியிலிருந்து, ஆங்கிலத்திற்கு ஹெலன் ஸ்டீவன்சன் மொழி பெயர்த்துள்ளார். இந்த புத்தகமும் புக்கர் பரிசுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
A Leopard-Skin Hat:
புக்கர் பரிசுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள நாவல், அன்னே செர்ரே (Anne Serre) எழுதிய "எ லெப்பர்ட்-ஸ்கின் ஹாட்" (A Leopard-Skin Hat). பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை மார்க் ஹட்சின்சன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
6 புத்தகங்களின் ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர் விவரங்கள்:
--> Heartlamp: Selected Stories - Banu Mushtaq(author), Deepa bhasthi (translator)
--> Perfection: Vincenzo Latronico (author), sophie hughes (translator)
--> On the Calculation of Volume I -- Solvej Balle (author), Barbara J haveland (Translator)
--> A Leopard-Skin Hat : Anne Serre (author), mark hutchinson (translator)
--> Small Boat : Vincent Delecroix (author), helen stevenson (translator)
--> Under the Eye of the Big Bird: Hiromi Kawakami (author) , asa yoneda (translator)
நடப்பாண்டு புக்கர் பரிசினை வென்ற பானு முஷ்டாக் (Banu Mushtaq), தீபா பாஸ்தி ஆகியோருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டிற்கான புக்கர் விருதை பிரித்தானிய நாவலாசிரியை சமந்தா ஹார்வே (Samantha Harvey) "சுற்றுப்பாதை" (Orbital) நாவலுக்காக வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.