தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, கச்சத்தீவு தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கச்சத்தீவு கோரிக்கை
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாக, கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்" என்று பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி இருந்தார்.
இலங்கை அதிபரின் கச்சத்தீவு பயணம்
இந்த நிலையில், “கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி” என்று இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் ரோந்து கப்பலில் சென்று கச்சத்தீவை அதிகாரிகளுடன் பார்வையிட்டார். தொடர்ந்து, யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் வளர்ச்சி பணிகளை நேற்று (செப்.1) தொடங்கி வைத்து உரையாற்றுகினார்.
"எந்த அழுத்தத்திற்கும் பணிய மாட்டேன்"
தொடர்ந்து அவர் தனது உரையில், “கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. வெளிநாட்டினர் அத்துமீறி நுழைவதிலிருந்து நமது கடலைப் பாதுகாக்க வேண்டும். கச்சத்தீவு எங்கள் மீனவர்களுக்கு மிக முக்கியமான இடம். நாட்டு மக்களுக்கு கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்திற்கும் நான் அடிபணியப் போவதில்லை. எதிர்கால சந்ததியினருக்காக நமது நிலம், தீவுகள், கடல் மற்றும் வான் பகுதியைப் பாதுகாப்பது எனது பொறுப்பு” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

விஜய் பேச்சுக்குக் எதிர்வினை
விஜய் கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதை தொடர்ந்து, இலங்கையில் இருந்து இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சில நாட்களுக்கு முன்பு, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜதா ஹேரத் செய்தியாளர்களை சந்தித்தபோது, விஜய்யின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, “அரசியலுக்காக கச்சத்தீவு குறித்து கூறப்படும் கருத்துகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை. கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.