அமெரிக்க அதிபராக மீண்டும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே, அமெரிக்காவின் அண்டை நாடுகளுக்கு பெரிய தலைவலியாக டிரம்ப் விதிக்கும் சில உத்தரவுகள் இருந்து வருகிறது. அமெரிக்காவின் எல்லைப் பரப்பளவினை விரிவாக்கும் கனவினை டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். பனாமா கால்வாய், கிரீன்லாந்தினை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முயல்வதோடு, கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றவும் பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகிறார் டிரம்ப்.
நீர்நிலையின் பெயரை மாற்ற உத்தரவு:
இதில் ஒரு அங்கமாக தான் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, அதிபராக பதவியேற்ற முதல் நாளன்று, டிரம்ப், மத்திய அரசாங்கத்தால் அனைத்து குறிப்புகளிலும் நீர்நிலையின் பெயரை மாற்றும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 9 ஆம் தேதி, அமெரிக்காவினை சுற்றியுள்ள வளைகுடாவின் மீது பறந்து சென்று அதை "அமெரிக்க வளைகுடா தினம்" என்று அறிவித்தார். இங்கு தான் மெக்சிகோ இடையே எழுந்தது பிரச்சினை.
தெற்கு அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு கடல் படுகை சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக "மெக்சிகோ வளைகுடா" என அழைக்கப்பட்டு வந்தது. அதனை “அமெரிக்க வளைகுடா” என அழைக்க டிரம்ப் தலைமையிலான அரசு நெருக்கடி கொடுத்தது. அமெரிக்க பிரதிநிதிகள் சபை, "அமெரிக்க வளைகுடா" என்பதை அதிகாரப்பூர்வ பெயராக முறைப்படுத்த வாக்களித்தது.
அமெரிக்காவிற்குள் “அமெரிக்கா வளைகுடா”:
இதனைத் தொடர்ந்து தற்போது, அமெரிக்காவிற்குள் உள்ள பயனர்களுக்கு கூகிள் வரைபடத்தில் மெக்சிகோ வளைகுடா "அமெரிக்க வளைகுடா" என காட்டுகிறது. அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பயனர்களுக்கு இது "மெக்சிகோ வளைகுடா" எனத் தோன்றுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ வளைகுடாவை "அமெரிக்க வளைகுடா" என்று முத்திரை குத்தியதை ஏற்றுக்கொண்டதற்காக கூகிள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது மெக்சிகோ அரசு. மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சகம், அதன் எல்லைக்குள் உள்ள நீர்நிலைகளைக் குறிக்க "அமெரிக்க வளைகுடா" என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கோரி கூகுள் நிறுவனத்திற்கு முன்னதாக கடிதங்களை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பரஸ்பர வரி விதிப்பு மூலம் உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்ட டொனால்ட் டிரம்ப், அதிகார எல்லைகளை விரிவுப்படுத்தும் எண்ணத்தோடு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் அண்டை நாடுகளுடனான உறவில் மோதல் போக்கையும் உருவாக்கி வருகிறார் என விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.