இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 3 ஆண்டுகளாக தரை, கடல் மற்றும் வான் வழித்தாக்குல் நடைபெற்று வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் கடந்த 24 மணி நேரத்திலேயே நடைபெற்ற தாக்குதலில் 79 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா பகுதியில் 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய போரில் இதுவரை, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தொடர்ந்த தாக்குதல்களால் காசா பகுதியில் மின்சாரம், தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அகதிகளின் எண்ணிக்கையும் ஏறக்குறைய 20 லட்சத்தை கடந்துவிட்டதாக யுஎன் தகவல்கள் கூறுகின்றன.
போருக்கு உடனடி முடிவை காண வேண்டுமென பல்வேறு நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் இரு தரப்பினரும் வன்முறையை நிறுத்த தயாராக இல்லை என்பது சிக்கலான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சமுதாயம் இந்தப் போருக்கு முடிவை காண வேண்டியது அவசியமாகியுள்ளது.