டிரம்ப் அமைதி பேச்சுவார்த்தை – காசா நகருக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம்
டிரம்பின் அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில், காசா நகரத்துக்குள் இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில், காசா நகரத்துக்குள் இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில், ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெண்கள், குழந்தைகள், மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் உணவுக்காகக் காத்திருந்தோர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு, 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதிலிருந்து, காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்
தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் நடத்திய கடும் விமான தாக்குதலில் வெறும் ஒரு நாளிலேயே 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல் தொடர்பாக அதிபர் டெனால்ட் ட்ரம்ப் 2 வாரங்களுக்குள் முடிவெடுப்பார் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஈரானில் உள்ள ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டும் மையத்தை தாக்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே 7 ஆவது நாளாக தொடரும் மோதலால் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 326 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்ட ஜி7 நாடுகள், ஈரானின் தாக்குதலில் இருந்து தற்காத்துகொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆல்பர்ட்டாவின், கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியது போல், இஸ்ரேல் - ஈரான் இடையேயும் அமைதியை ஏற்படுத்துவேன். என்னுடைய தலையீட்டால் இஸ்ரேல்-ஈரான் போர் முடிவுக்கு வரும். பதற்றத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்.
ஈரான் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை என்ன? இவர்களில் யார் பலம் மிக்கவர்கள்? போர் மூண்டால் வெல்லப்போவது யார்?
இஸ்ரேல் நடத்திய "ஆப்ரேஷன் ரைசிங் லயன்" என்ற ரகசிய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது பதில்தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்காக, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.
ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த ஒப்புதல் பிரதிபலிக்கிறது என மாலத்தீவு அரசு அறிக்கை
காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கிய நிலையில் இதுவரை 700 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது என்றும் ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.