சினிமா

ரேஸுக்கு தயாராகும் அஜித்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிரான்சில் நாளை மறுநாள் (மே 2) நடைபெறவுள்ள சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக, நடிகர் அஜித் அந்தப் போட்டியின் டிராக்கை நேரில் ஆய்வு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரேஸுக்கு தயாராகும் அஜித்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Ajith Kumar
பிரான்சில் நாளை மறுநாள் (மே 2) நடைபெறவுள்ள சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக, நடிகர் அஜித் அந்தப் போட்டியின் டிராக்கை நேரில் ஆய்வு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் பந்தயங்களில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக 'அஜித்குமார் ரேசிங்' என்ற சொந்த அணியைத் தொடங்கி, சமீபகாலமாக துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றுள்ளார். கடந்த 23-ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த கையோடு, பிரான்சில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் (Michelin Le Mans Cup) தொடரில் பங்கேற்பதற்காக அவர் அங்கு விரைந்தார்.

சர்க்யூட் பால் ரிகார்டில் ஆய்வு

சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் முக்கியமான இந்தப் போட்டியின் இரண்டாம் சுற்று, மே 2-ஆம் தேதி பிரான்சில் உள்ள 'சர்க்யூட் பால் ரிகார்டு' (Circuit Paul Ricard) தளத்தில் நடைபெற உள்ளது. இதற்காகத் தனது 'அஜித் ரெடான்ட் ரேஸிங்' (Ajith Redant Racing) அணி சார்பில் இரண்டு கார்களைக் களமிறக்க உள்ள அஜித், போட்டிக்கு முன்னதாக டிராக்கை மிகத் தீவிரமாக ஆய்வு செய்துள்ளார்.



வைரலாகும் வீடியோ

பல்வேறு வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வரும் அஜித், தற்போது பிரான்ஸ் ரேசிங் டிராக்கில் ஆய்வுகளை மேற்கொள்ளும் வீடியோ அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்புகளுக்கு இடையிலும் கார் பந்தயங்களில் அவர் காட்டி வரும் இந்தத் தொடர் ஈடுபாடு, சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.