சினிமா

"ராஜன் பொண்டாட்டி டா நானு" - கண்டதை எழுதாதீங்க ஆண்ட்ரியா விளக்கம்

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் வெற்றிமாறன் படமான "வடசென்னை" கதைக்களத்தில் உருவாகிவரும் "அரசன்" படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா "நான் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறேனா ?" என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்து விளக்கம் கூறியுள்ளார்.


Andrea denies his arasan role rumours
தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் வெற்றிமாறன் படமான "வடசென்னை" கதைக்களத்தில் உருவாகிவரும் "அரசன்" படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா "நான் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறேனா ?" என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்து விளக்கம் கூறியுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த படம் "வடசென்னை". இந்த படம் 2018-ஆம் ஆண்டு வெளியான நிலையில் படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான தொடர்ச்சியாக "அன்புவின் எழுச்சி - வடசென்னை 2" என்ற லீடுடன் முடித்துவிடுவார். வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று வெற்றிமாறன், தனுஷ் இருவரும் ஏறும் மேடைகளில் எல்லாம் ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டுவந்தனர்.

பல வருடங்களாக "அன்புவின் எழுச்சி எப்போ?", "வடசென்னை 2?" எப்போ என்று கேட்டு வந்த ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் கேட்டுவந்த நிலையில், திரைத்துறையை ஆச்சரியப்படுத்தும் விதமாக வடசென்னை கதை பின்புலத்தில் சிம்புவை வைத்து ஒரு படம் செய்வதாக ஃபர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட்டு சமூக வலைத்தளத்தை அதிரவிட்டார்.

மேலும், வடசென்னை தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் அவரிடம் காப்பிரைட்ஸ் ஒப்புதல் கேட்டபொழுது "தனுஷ் முழுமனதுடன் சம்மதம் தெரிவித்தார்" எனவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, டீசரில் "தனுஷை நடிக்க வைங்க சார்... சூப்பரா பெர்பாமன்ஸ் பண்ணுவாப்ல" என்று சிம்பு சொல்லும் வசனமும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது. மேலும் இந்த படத்தை கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிப்பதாகவும், வெற்றிமாறனுடன் முதல் முறையாக இசையமைப்பாளர் அனிருத் இணைவதாகவும் டீசர் மூலம் படக்குழு அறிவித்தது.

அதுமட்டுமின்றி, அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் வடசென்னை படத்தின் கதாபாத்திரங்கள் அரசன் படத்திலும் வருவார்கள் எனவும் நிரூபணமானது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு போன்ற முக்கிய நட்சத்திரங்கள் கூடுதலாக இடம்பெறுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

வடசென்னையில் இடம்பெற்ற கிஷோர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா போன்ற முக்கிய புள்ளிகள் அரசனில் இடம்பெற்ற நிலையில் சினிமா ஆர்வலர்கள் பலர், படத்தை முன்னதாகவே டீகோட்(Decode) செய்வதாகக்கூறி "சந்திரா தான் சிம்புவின் அம்மா" என ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் குறித்து தகவல்களை பரப்பி வந்தனர்.

அதுகுறித்து, சமீபத்தில் ஆண்ட்ரியாவிடம் கேட்டபொழுது "தற்போது நான் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறேன். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பா சென்றுக்கொண்டு இருக்கிறது. இதுவரை படம் நன்றாக வந்து இருக்கு. ஆனால், வடசென்னை படத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் நான் சிம்புவின் அம்மாவாக நடிப்பதாகத் தப்பு தப்பாவும், நீங்களே பரபரப்பாவும் ஏதேதோ எழுதீட்டு வரீங்க, அதற்கு நானே நேரடியாக விளக்கம் கொடுத்து விடுகிறேன்... நான் சிம்புவோட அம்மா கிடையாது, நான் அதே சந்திரா தான்" என டீகோட் செய்தவர்களின் எண்ணங்களுக்கு செக் வைத்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், அரசன் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு ஆண்ட்ரியா அவர்கள் வடசென்னையில் வரும் "ராஜன் பொண்டாட்டி டா நான்" என்ற அவருடைய வசனத்தையே சமூக வலைத்தளத்தில் டேக் செய்து சினிமா ஆர்வலர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.