நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அதேபோல், நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார்.
சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள், பல்வேறு மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும், படத்தின் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முன்னதாக படத்தின் கிளிம்ஸ் மற்றும் 'சிக்கிடு வைப்..' பாடலின் புரோமோ வீடியோக்களை படக்குழு வெளியிட்டது. இவை இணையத்தில் வைரலாக நிலையில், ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான “சிக்கிடு வைப்..’ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. டி.ராஜேந்தரின் குரலில் ஒலிக்கும் தாளத்துடன் இப்பாடல் தொடங்குகிறது. மேலும் இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ராப் பாடகர் அறிவு இணைந்து பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு அறிவு வரிகள் எழுதியுள்ளார்.
இந்த பாடல் ‘கூலி’ படத்தில் ரஜினிக்கு இன்ட்ரோ பாடலாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்பாடலில் நடிகர் ரஜினியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Coolie Varaan sollikko..!😎 #Chikitu Music Video is out now!#GetChikitufied 📣💥
— Sun Pictures (@sunpictures) June 25, 2025
▶️ https://t.co/eeQaA8RWor#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #TRajendar @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan… pic.twitter.com/DuG44VlJtg
LIVE 24 X 7