இந்தியாவில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள E20 பெட்ரோலுக்கு மாற்றாக, குறைந்த அளவு எத்தனால் கலந்த E10 பெட்ரோலையும் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
20% எத்தனால் கலந்த E20 பெட்ரோல் கடந்த ஆண்டு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் E20 மட்டுமே கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை குறைப்பது, அந்நிய செலாவணியை சேமிப்பது மற்றும் மாசுபாட்டை கட்டுப்படுத்துவது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக கூறப்பட்டன.
இதுகுறித்து, அவர் கூறுகையில் "E20 உடன் E10 போன்ற குறைந்த எத்தனால் கலவை கொண்ட பெட்ரோலையும் விற்பனைக்கு வழங்கினால் பொதுமக்களின் அச்சம் பெருமளவில் குறையும்" என தெரிவித்துள்ளார்.
பழைய வாகனங்களுக்கு சிக்கல்?
E20 பயன்பாடு வாகனங்களின் செயல்திறன், மைலேஜ் மற்றும் சில உதிரிபாகங்களின் நீடித்த தன்மை குறித்து வாகன உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பழைய இருசக்கர வாகனங்களில் எத்தனாலுக்கு ஏற்றதாக இல்லாத பழைய ரப்பர் சீல்கள் உள்ளிட்ட பாகங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நாகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் சுமார் 7.5 முதல் 8 கோடி பழைய இருசக்கர வாகனங்கள் இருப்பதாகவும், அவற்றில் உள்ள சில பாகங்களை மாற்றியமைக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, புதிய வாகனங்களுக்கு E20 நடைமுறை தொடர்ந்தாலும், பழைய வாகனங்களை பாதுகாக்கும் வகையில் மாற்று எரிபொருள் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே அவரது கருத்தாகும்.
அரசின் நிலைப்பாடு என்ன?
குறைந்த எத்தனால் கலவை கொண்ட E0 அல்லது E10 பெட்ரோலை மீண்டும் கொண்டு வருவதற்கான எந்த திட்டமும் தற்போது இல்லை என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
E20 திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து ஆதரித்து வருகிறது. எத்தனால் கலவை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான சார்பு குறைந்துள்ளதாகவும், அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மேம்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கை இந்தியா நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே எட்டியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
E20 விவகாரம் அரசியல் சர்ச்சையாகவும் மாறியது:
E20 பெட்ரோல் கட்டாயமாக்கப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2021-ம் ஆண்டு NITI Aayog வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் படிப்படியான அமலாக்க நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
E20 கொள்கைக்கு எதிரான மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையின்போதும் இந்த விவகாரம் விவாதத்திற்கு வந்தது. E20 தொடர்பான முடிவுகள் அடுத்த ஆண்டு தெரியவரும் என அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி தெரிவித்திருந்தார். பின்னர், E20-ஐ அரசு ‘பரிசோதனை’ என குறிப்பிடவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இதற்கிடையில், E10 உள்ளிட்ட குறைந்த எத்தனால் கலவை கொண்ட பெட்ரோலை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற தலைமை பொருளாதார ஆலோசகரின் கருத்து, E20 விவாதத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7