தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தங்களது அரசுக்கு ஆதரவளிக்கும் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு இன்று (புதன்கிழமை) மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெறும் இக்கூட்டம், தமிழக அரசியலில் ஒரு புதிய மெகா கூட்டணியை உருவாக்குவதற்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.
மாறும் அரசியல் களம்: பங்கேற்கும் முக்கியக் கட்சிகள்
திமுக கூட்டணியில் இருந்து வென்று, பின்னர் தவெக அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்த காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல், ஆகிய கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலையில், காங்கிரஸ் திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு தவெகவின் அதிகாரப்பூர்வ கூட்டணியாக மாறியுள்ளது. விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் விஜய் அரசில் கூட்டணிக் கட்சிகளாக அங்கம் வகிக்க, இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கின்றன. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுகவின் 2 எம்.எல்.ஏ.க்கள் (திமுக சின்னத்தில் வென்றவர்கள்) தற்போது வரை தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய 'மதச்சார்பற்ற கூட்டணி'க்கு அச்சாரம்?
சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று, தனிப்பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) சற்றே குறைவாக இருந்தது. பின்னர் விஜய் தனது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் தவெக பலம் 107 ஆகக் குறைந்தது. எனினும், காங்கிரஸ் (5), விசிக (2), ஐயுஎம்எல் (2), சிபிஐ (2), சிபிஎம் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் அரசு பெரும்பான்மையைத் தாண்டி நிலையான ஆட்சியை அமைத்துள்ளது.
தற்போது நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், வெறும் ஆட்சி ஒருங்கிணைப்புக்கானது மட்டுமல்லாமல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, திமுகவின் பலத்த கூட்டணியை உடைக்க முதலமைச்சர் விஜய் உருவாக்கும் புதிய 'மதச்சார்பற்ற மெகா கூட்டணி'க்கான தொடக்கமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
மாநில பிரச்னைகள் குறித்து ஆலோசனை
மேலும், காவிரி விவகாரம், மேகதாது அணை பிரச்சினை, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட மாநில உரிமைகள் சார்ந்த முக்கிய பிரச்னைகளில் கூட்டணி கட்சிகளின் கருத்தையும் கலந்து ஆலோசித்து ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இது தவிர கூட்டணி கட்சிகளின் விருப்பங்கள் என்னென்ன இருக்கிறது. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் என்னவென்றும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இன்றைய கூட்டத்தின் முடிவிலேயே, இது வெறும் நட்பு ரீதியான சந்திப்பா அல்லது தமிழக அரசியலை மாற்றியமைக்கப் போகும் புதிய தவெக தலைமையிலான கூட்டணியின் தொடக்கப் புள்ளியா என்பது தெளிவாகத் தெரியும்.

LIVE 24 X 7