சமீப நாட்களாக தமிழக அரசியலில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மாற்று கட்சிகளில் இணைந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வுமான சி.விஜயபாஸ்கர் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களின் காரணமாக, எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது சி.விஜயபாஸ்கர் அதிருப்தியில் இருந்து வந்தார். குறிப்பாக, சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த சி.விஜயபாஸ்கர், மாற்று அரசியல் வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வந்தார். முதலில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய யோசித்ததாகக் கூறப்பட்டாலும், சில ஊழல் புகார்களின் பின்னணியால் தவெக தரப்பில் தயக்கம் காட்டியதாகத் தெரிகிறது.
திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக திமுக தலைமையுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, தற்போது அது சாதகமாக முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், விஜயபாஸ்கரின் தேர்தல் அனுபவமும் களப்பணித் திறனும் கட்சிக்குப் பலம் சேர்க்கும் என திமுக தலைமை கருதியதாகக் கூறப்படுகிறது.
அறிவாலயத்தில் இணையத் திட்டம்
திமுகவில் இணைந்த பிறகு சி.விஜயபாஸ்கருக்குப் புதுக்கோட்டை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அனைத்துக் கட்டப் பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ள சூழலில், இன்னும் சில நாட்களுக்குள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் அதிகாரப்பூர்வமாகத் திமுகவில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7