தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், சென்னை நந்தனம் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது இறுதி கட்டப் பிரசார உரையை நிகழ்த்தினார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், இந்தத் தேர்தல் திமுக ஆட்சியை அகற்றுவதற்கான இறுதி வாய்ப்பு என்று குறிப்பிட்டார். பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டு வீட்டு வரி, சொத்து வரி மற்றும் விலைவாசியை மட்டுமே உயர்த்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தின் கடன் சுமையை அதிகரித்ததைத் தவிர இந்த அரசால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என அவர் சாடினார்.
மாறாத கொள்கை நிலைப்பாடு
தனது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய விஜய், "நமது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலையில் இருந்து நான் ஒரு இன்ச் கூட மாறவில்லை. மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் தவெக 100 சதவீதம் உறுதியாக இருக்கும். எம்மதமும் நம்மதம் என்பதுதான் எனது முகம்; சிங்கம் எப்போதுமே சிங்கம்தான், அது தனித்து வந்தாலும் எதிரிகளுக்குத் தண்ணீ காட்டிவிடும்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற திமுக நாடகமாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
திமுக - பாஜக மறைமுகக் கூட்டணி?
திமுக ஒரு பக்கம் கதர் வேடமும், மறுபக்கம் காவி வேடமும் போடுவதாக விஜய் சாடினார். "பாஜகவுடன் திமுக மறைமுகக் கூட்டணியில் இருப்பதாக நான் அன்றே கூறினேன், இப்போது அதையே மமதா பானர்ஜியும் கூறியுள்ளார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, தங்கள் மீதான ஊழல் மற்றும் கொள்ளை வழக்குகளில் இருந்து தப்பிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மோடி மற்றும் அமித் ஷாவின் காலில் விழுவார்கள்" என்று அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

LIVE 24 X 7