நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இரண்டாவது குழந்தைக்குத் திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பாரம்பரிய முறைப்படி சீர் கொண்டு வந்து வாழ்த்திய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், கயல்விழிக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்தம்பதியினருக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது முறையாகத் தந்தையான சீமானுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
மேளதாளத்துடன் வந்த சீர்வரிசை
இந்நிலையில், சீமானின் பெண் குழந்தைக்குத் திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (மே 27) பாரம்பரிய முறைப்படி சீர் கொண்டு வந்து வாழ்த்தியுள்ளார். தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, பல தாம்பூலத் தட்டுகளில் பழங்கள், இனிப்புகள் மற்றும் மங்களப் பொருட்களுடன் மேளதாளங்கள் முழங்க அவர் சீமானின் இல்லத்திற்கு வந்தார். வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்ற சீமான், அனிதா ராதாகிருஷ்ணனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
தங்கச் செயின் அணிவித்து மகிழ்வு
வீட்டிற்குள் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன், சீமானின் பிறந்த பெண் குழந்தைக்குத் தனது கையாலேயே அன்பளிப்பாகத் தங்கச் செயின் ஒன்றை அணிவித்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அரசியல் தளத்தில் கொள்கை ரீதியாக இரு வேறு துருவங்களாகச் செயல்பட்டு வந்தாலும், குடும்ப நிகழ்வில் நேரில் வந்து சீர் கொடுத்து வாழ்த்திய இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

LIVE 24 X 7