அ.தி.மு.க-வில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த உள்கட்சிப் பிளவு மற்றும் கருத்து வேறுபாடுகள் முழுமையாக நீங்கி, இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக ஒன்றிணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எஸ்பி வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்றனர். அப்போது, சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறி ஆளும் தவெக அரசுக்கு ஆதரவளித்ததற்கு வருத்தம் தெரிவித்து, இ.பி.எஸ்-ஸிடம் முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர். கட்சியின் தோல்விகளை ஆராய வேண்டும், பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்ற தங்களது கோரிக்கைகளை இ.பி.எஸ் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த இணைப்பு சாத்தியமாகியுள்ளது.
சபாநாயகரிடம் அளித்த கடிதங்கள் வாபஸ்
இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை இ.பி.எஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், எஸ்பி வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் நேரில் சந்தித்தனர். இரு தரப்பிலும் மற்றொன்றுக்கு எதிராக அளிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க நடவடிக்கை கோரும் கடிதங்களை முறைப்படி திரும்பப் பெறுவதாகச் சபாநாயகரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
எங்களுக்குள் பிளவு கிடையாது - எஸ்பி வேலுமணி
செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்பி வேலுமணி, "எங்களுக்குள் இருந்தது வெறும் கருத்து வேறுபாடுதான், பிளவு கிடையாது. தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்கள் செல்வாக்கைக் கருத்தில் கொண்டே தவெக-வுக்கு ஆதரவளித்தோம். நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை என்பதை ஆளும் கட்சியே உறுதி செய்துவிட்டது. தற்போது கருத்து வேறுபாடுகள் நீங்கிவிட்டதால் அ.தி.மு.க மீண்டும் முழு வலுவோடு செயல்படும். சி.வி. சண்முகமும் எங்களுடன் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்" என்று விளக்கமளித்தார். இந்தச் சந்திப்பின் போது சி.வி. சண்முகம் மட்டும் பங்கேற்காத நிலையில், அவருடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

LIVE 24 X 7