அரசியல்

Why Silent CM Sir: பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? என்று முதல்வர் விஜய்யை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Why Silent CM Sir: பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!
MK Stalin and CM Vijay
சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மட்டும் 24 மணிநேரத்தில் 12 பாலியல் வன்முறைகள் நடந்திருப்பதாக ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின், பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? என்று முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன். சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?

மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.