ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு சீசனில் பல உலக சாதனைகளைப் படைத்து ஒரு புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகப் புதிய சண்டிகரில் நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய பீகாரைச் சேர்ந்த இடது கை ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் எடுத்துச் சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். நடப்புத் தொடரில் அவர் 90-களில் ஆட்டமிழப்பது இது மூன்றாவது முறையாகும்.
இந்த அதிரடியான இன்னிங்ஸின் மூலம் நடப்பு சீசனில் அவரது மொத்த ரன் குவிப்பு 776 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் விராட் கோலி (2016-ல் 973 ரன்கள்) முதலிடத்திலும், அவருக்கு அடுத்த இடங்களில் ஷுப்மன் கில் (890), ஜோஸ் பட்லர் (863) மற்றும் டேவிட் வார்னர் (848) ஆகியோர் உள்ளனர்.
டி20 உலக சாதனைகளும் பவர்பிளே அதிரடியும்
இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி 63 பவுண்டரிகள் மற்றும் 72 சிக்ஸர்கள் என மொத்தம் 135 பவுண்டரிகளை விளாசியுள்ளார். இது ஒரு டி20 தொடரில் எந்தவொரு வீரரும் குவித்த அதிகபட்ச பவுண்டரிகள் என்ற புதிய உலக சாதனையாகும். இதற்கு முன் 2022-ல் ஜோஸ் பட்லர் (128 பவுண்டரிகள்) படைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். மேலும், நடப்பு சீசனில் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 521 ரன்களைக் குவித்து, உலக அளவில் ஒரு டி20 தொடரின் பவர்பிளேயில் 500-க்கும் மேல் ரன்கள் எடுத்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இப்பட்டியலில் டேவிட் வார்னர் (467) மற்றும் டிராவிஸ் ஹெட் (402) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.
அதிவேக 1000 ரன்கள் மைல்கல்
ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் (வெறும் 440 பந்துகள்) 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையைச் சூர்யவன்ஷி நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஆண்ட்ரே ரஸ்ஸல் 545 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. அதேபோல், இன்னிங்ஸ் அடிப்படையில் வெறும் 23 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்து, அதிவேகமாக இந்த இலக்கை எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் பி. சாய் சுதர்சன் 25 இன்னிங்ஸ்களில் இச்சாதனையைப் படைத்திருந்தார். உலக அளவில் 21 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்த ஷான் மார்ஷுக்கு அடுத்தபடியாக வைபவ் சூர்யவன்ஷி இந்த அதிவேகப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7