சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் கடந்த மாதம் அப்பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரு முக்கிய சாத்தியக்கூறுகளைப் பகிர்ந்துள்ளார்.
2019-இல் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்வதற்குக் காரணமாக இருந்த முன்னாள் கேப்டன் இயன் மோர்கன், சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் ரேஸில் முன்னணியில் இருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தோனி ஓராண்டுக்குத் தற்காலிகப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இயன் மோர்கனிடம் சர்வதேச அளவில் பயிற்சியாளராகப் பெரிய அனுபவம் இல்லையென்றாலும், அவர் ஒரு சிறந்த வியூகவாதியாகக் கருதப்படுகிறார். 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற அவர், தற்போது ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் லண்டன் ஸ்பிரிட் அணியின் வாரிய இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
தமது யூடியூப் பக்கத்தில் இது குறித்துப் பேசிய அஸ்வின், இயன் மோர்கன் சிஎஸ்கே-வுக்கு வருவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நிச்சயமாக நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்த ஆண்டே பொறுப்பேற்பாரா அல்லது ஏலத்திற்குப் பிறகு பொறுப்பேற்பாரா என்ற கேள்விகளும் உள்ளதாகக் கூறினார்.
மேலும், 2027 உலகக் கோப்பை நெருங்கி வரும் சூழலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகள் மற்றும் பிற காரணங்களால் இதில் சில சவால்கள் இருக்கலாம் எனவும், பிற ஐபிஎல் அணிகளின் வாய்ப்புகளை மோர்கன் ஏற்கனவே நிராகரித்துள்ளதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7