ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் அபிஷேக் பொரெல், மருத்துவ மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ மாணவி ஒருவர் ஜூன் மாதம் அளித்த புகாரில், அபிஷேக் பொரெல் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகப் பொய் வாக்குறுதி அளித்துப் பாலியல் உறவு கொண்டதாகவும், தாக்குதல் நடத்தி மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே நட்பு இருந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் அபிஷேக் தன்னைத் தவிர்க்கத் தொடங்கியதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், தன்னைக் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, உணவு வழங்காமல் தனிமைப்படுத்தியதாகவும், இதனால் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தனது புகாரில் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இப் புகாரின் அடிப்படையில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து, டும்டும் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து ஹூக்ளி கிராமப்புறக் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
முன்னதாக தன் மீதான இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அபிஷேக் பொரெல் மறுத்திருந்தார். இடதுகை பேட்டரான இவர், 2023-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் 4 இன்னிங்ஸ்களில் விளையாடி 108 ரன்கள் எடுத்திருந்தார்.

LIVE 24 X 7