ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ள நிலையில், மெஸ்ஸி மற்றும் லமின் யமால் இடையிலான 19 ஆண்டுகள் பழமையான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் அணியின் 19 வயது இளம் நட்சத்திரமான லமின் யமால், மெஸ்ஸியைப் போலவே பார்சிலோனா கால்பந்து கிளப் அணியால் அடையாளம் காணப்பட்டவர். 15 வயதிலேயே அறிமுகமாகி சாதனை படைத்த இவர், மெஸ்ஸியைப் போலவே இடது காலால் விளையாடும் திறமை கொண்டவர். பார்சிலோனா அணியில் மெஸ்ஸி அணிந்த புகழ்பெற்ற 10-ஆம் எண் ஜெர்சியை அணிந்த மற்ற வீரர்கள் தடுமாறிய நிலையில், யமால் அந்த ஜெர்சியைப் பெற்றுத் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களால் 'ஜூனியர் மெஸ்ஸி' என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இவர்கள் இருவருக்கும் இடையிலான ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், யமாலின் தந்தை சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 19 ஆண்டுகளுக்கு முன்பு யுனிசெஃப் (UNICEF) காலண்டர் புகைப்படத்திற்காக மெஸ்ஸி போஸ் கொடுத்தபோது, அவரது கையில் இருந்த ஒரு மாதக் குழந்தைதான் தற்போதைய ஸ்பெயின் வீரர் லமின் யமால்.
இந்த அரிய புகைப்படத்தில் யமாலின் தாயாரும் உள்ளார். அன்று மெஸ்ஸியின் கைகளில் குழந்தையாகத் தவழ்ந்த யமால், இன்று 19 ஆண்டுகள் கழித்து அதே மெஸ்ஸியை எதிர்த்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் களம் காண்பதை விதியின் அற்புதம் என்று கால்பந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

LIVE 24 X 7